;
Athirady Tamil News

பிரான்சின் பொருளாதாரம் உயர்ந்தது- ஆய்வில் தகவல்..!!

0

கடந்த ஆண்டின் இறுதிக் காலாண்டில் முதலீடும் வெளியீடும் அதிகரித்ததன் காரணமாக பிரான்சின் பொருளாதாரம் எதிர்பார்த்ததைவிட விரைவாக 2 சதவிகித வளர்ச்சியை எட்டியுள்ளது.

தேசிய புள்ளியியல் ஏஜன்சியான INSEE புதனன்று வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு 1.1 சதவிகிதமாக இருந்த இந்த வளர்ச்சி 2017இல் 2 சதவிகிதத்தை எட்டியுள்ளது.

1.7 சதவிகித வளர்ச்சி மட்டுமே இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதலீடும் வெளியீடும் அதிகரித்ததன் காரணமாக பொருளாதார வளர்ச்சி 2 சதவிகிதத்தை எட்டியுள்ளது.

2018ஆம் ஆண்டைப் பொருத்தவரை, முதல் காலாண்டில் 0.5 சதவிகிதமும் இரண்டாவது காலாண்டில் 0.4 சதவிகிதமும் பொருளாதார வளர்ச்சி இருக்கும் என்று INSEE கணித்துள்ளது.

இந்த ஆண்டு பிரான்சின் பொருளாதாரம் 1.9 சதவிகிதம் அதிகரிக்கும் என்று The International Monetary Fund என்னும் அமைப்பு எதிர்பார்க்கிறது.

அதேபோல் வேலையில்லாமை விகிதமும் மிகவும் குறைந்துள்ளதாக INSEEயின் ஆய்வு தெரிவிக்கிறது.

பிரான்ஸ் முழுவதிலுமாக 2017ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டில் வேலையில்லாமை விகிதம் 8.9 சதவிகிதமாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nine − 6 =

*