;
Athirady Tamil News

கட்சியின் சிரேஷ்ட உபதலைவரின் மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபம்…!!

0

கட்சியின் சிரேஷ்ட உபதலைவரின் மறைவுக்கு அஞ்சலி

தமிழர் விடுதலைக் கூட்டணியின் சிரேஷ்ட உபதலைவர் குணரத்தினம் சிவகுலசிங்கம் அவர்கள் பங்குனி மாதம் முதலாம் திகதி (01 – 03 – 2018) அன்று காலமானார். அவரின் மறைவுக்கு தமிழர் விடுதலைக் கூட்டணி தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்ளுகிறது.

அன்னார் தமிழர் விடுதலைக் கூட்டணியினது நீண்ட கால உறுப்பினர், ஒரு உண்மையான தொண்டர், தீவிர செயற்பாட்டாளர்.

பல நெருக்கடியான காலகட்டங்களில் கட்சியின் தலைமைக்கு வலது கையாகச் செயற்பட்டவர்.

வேலணை பிரதேசசபையின் முன்னாள் உறுப்பினர்(2011). அவரின் மறைவினால் துயருறும் அவரின் பிள்ளைகள், குடும்பத்தினர் மற்றும் உற்றார், உறவினர், நண்பர்களின் துயரில் நாங்களும் பங்கு கொள்ளுகிறோம்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய கட்சியின் அனைத்து உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் பிரார்த்தனை செய்கின்றோம்.

பரமசிவம் சிறீதரன்
சட்டத்துறை மற்றும்
சர்வதேச விவகாரங்களுக்கான செயலாளர்
தமிழர் விடுதலைக் கூட்டணி

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 1 =

*