;
Athirady Tamil News

இலங்கையில் வருடத்திற்கு 48,000 இயற்கை கருச்சிதைவுகள்…!!

0

இலங்கையில் வருடத்திற்கு இயற்கை கருச்சிதைவுகள் 48 ஆயிரம் வரை பதிவாகி வருவதாக அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட குடும்பநல சுகாதார விசேட நிபுணரான மருத்துவர் கபில ஜயரத்ன இதனைத் தெரிவித்தார்.

ஒரு வருடத்திற்கு இலங்கையில் 4 இலட்சம் கரு உருவாவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இவற்றில் மூன்று இலட்சத்து 31 ஆயிரம் கருக்கள் பாதுகாப்பாக பராமரிக்கப்பட்டு சிசு நிலையை அடைவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும் 48,000 கருக்கள் இயற்கையாகவே சிதைவடைவதும் இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும் மருத்துவர் கபில ஜயரத்ன கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seven − 6 =

*