;
Athirady Tamil News

காயமடைந்த நிலையில் இலங்கை மீனவர்கள் இந்திய கடலோர காவல்துறையினரால் மீட்பு…!!

0

இலங்கை மீனவர்கள் சிலர் இந்திய கடற்பகுதியில் காயமடைந்த நிலையில், இந்திய கடலோர காவல்துறையினரால் காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மீனவர்களான ஐந்து பேர், கடந்த மாதம் 14ஆம் திகதி படகு ஒன்றில் இலங்கையிலிருந்து புறப்பட்ட நிலையில், கொழும்பிலுள்ள கடல்வழி மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திலிருந்து கிடைக்கப்பட்ட தகவலுக்கமையவே,

இந்திய கடலோர காவல்துறையினரால் அவர்கள் நேற்று முன்தினம் படகுடன் காப்பாற்றப்பட்டுள்ளனர். இந்திய ஊடகமொன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

மேற்படி படகில், காயமடைந்த நிலையிலிருந்த மீனவர்களுக்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × three =

*