;
Athirady Tamil News

யாழில் ஆரம்பமாகியுள்ள ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்…!!

0

யாழ் மாவட்டத்தின் 2018 ஆம் ஆண்டிற்கான முதலாவது ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் காலையில் இக்கூட்டம் ஆரம்பமாகியது.

இந்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் வடக்கு மாகாண முதலமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவருமான, சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான மாவை சேனாதிராஜா ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

இதன்போது துறை ரீதியான முன்னேற்ற மீளாய்வுகளில் மீள்குடியேற்றம், கல்வி, நீர் விநியோகம், போக்குவரத்து, தபால், வீடமைப்பு, சுகாதாரம், விவசாயம், மின் விநியோகம், நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் உள்ளுராட்சி சபைகள், வர்த்தக தொழிற்துறை உள்ளிட்ட துறைசார்ந்த விடயங்கள் ஆராயப்பட்டு வருகின்றன.

இக்கலந்துரையாடலில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், ஈ.சரவணபவன், வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம், வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா, வடக்கு மாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசன், வடக்கு மாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன், வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான அ.பரம்சோதி, பா.கஜதீபன், வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

இக்கூட்டத்தில், இணைத்தலைவர்களான விஜயகலா மகேஸ்வரன் மற்றும் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × five =

*