;
Athirady Tamil News

18 வயது மாணவிக்கு வீட்டில் நடந்த பயங்கரம், கலக்கத்தில் குடும்பம்…!!

0

கெகிராவை மல்தெணிபுர பிரதேசத்தின் வீடொன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் பாடசாலை மாணவியொருவர் படுகாயமடைந்துள்ளார்.

18 வயதுடைய குறித்த மாணவி கெகிராவை பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் , பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக அனுராதபுரம் பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

குறித்த வெடிப்பு சம்பவத்தில் மாணவியின் தலை மற்றும் கால்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு சில நாட்களுக்கு முன்னர் , மாணவியின் தந்தை ஒருவகையான அடையாளம் தெரியாத பொருளொன்றை வீட்டிற்கு கொண்டுவந்துள்ளார்.

அது வெடித்து சிதறியதில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் காவற்துறையினர் சம்பவ இடத்தில் இருந்து ஈயத்துண்டுகள் சிலவற்றை கைப்பற்றியுள்ளனர்.

அதன்படி , உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஹக்கபட்டாஸ் என்ற வெடிப்பொருள் வெடித்ததில் இந்த அனர்த்தம் இடம்பெற்றிருக்கக்கூடும் என காவற்துறை சந்தேகிக்கின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × 5 =

*