;
Athirady Tamil News

வவுனியாவில் தற்கொலைகள் அதிகரிப்பை தடுக்க துண்டு பிரசுரம் விநியோகம்…!! (படங்கள்)

0

வவுனியாவில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் தற்கொலைகளை கருத்தில் கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத:தும் முகமாக துண்டுபிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது.

கை கொடுக்கும் நண்பர்கள் எனும் அமைப்பு வவுனியா பஸ்நிலையத்தில் இன்று காலை 9 மணியளவில் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்ததுடன் நகர்ப்பகுதியிலும் விநியோகித்திருந்தனர்.

மனதில் கவலை வெறுப்பு வாழ்வில் துயரம் போன்றன இருந்தால் எம்முடன் தொடர்புகொள்ளுமாறும் உங்களுடைய பிரச்சனைகளை தீர்ப்பதற்கு உறுதுணையாக கைகொடுக்கும் நண்பர்கள் அமைப்பு இருக்கும் என்று துண்டுப்பிரசுரத்தில் கூறப்பட்டுள்ளதுடன் இலவசமாகவே தமது சேவைகளை வழங்குவதாகவும் தயக்கம் இன்றி எம்மை தொடர்புகொள்ளுமாறும் ரகசியங்கள் பாதுகாக்கப்படும் என்றும் அத்துண்டுபிரசுரத்தில் கூறப்பட்டுள்ளது.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twelve + thirteen =

*