;
Athirady Tamil News

வவுனியாவில் மாணவர்களுக்கு இலவச பயண கட்டணம் வழங்க கோரி விழிப்புணர்வு பயணம்…!! (படங்கள்)

0

இலங்கையிலுள்ள சகல பாடசாலை மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு பேரூந்துகளில் இலவசமாக பயணம் செய்வதற்கான அனுமதியை அரச மற்றும் தனியார் போக்குவரத்து சேவையினர் நாடுபூராவும் பாரபட்சமின்றி அமுல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வவுனியாவிலிருந்து இரண்டு இளைஞர்கள் பீதுருதாலகால மலைச்சிகரத்தை ஏறுவதற்கான விழிப்புணர்வு பயணமொன்றை மேற்கொண்டுள்ளனர்.

வவுனியா சைவப்பிரகாசா மகளிர் கல்லூரியிலிருந்து இன்று (03-03-2018) காலை 10.00 மணிக்கு தர்மலிங்கம் பிரதாபன் மற்றும் மங்களராஜன் இமயவன் என்ற இரண்டு இளைஞர்களே மோட்டார் வண்டியில் இவ் விழிப்புணர்வு பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.

‘சிறுவர்களின் வாழ்வை ஒளிமயமாக்குவோம்’ எனும் தொனிப்பொருளில் கடல் மட்டத்திலிருந்து 2524 மீற்றர் மலைச்சிகரம் ஏறும் இம் முயற்சி பயணத்தை வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கொடியசைத்து ஆரம்பித்து வைத்தார்.

நிகழ்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய அதிதிகள்.

நாள்தோறும் பாடசாலை செல்வதற்கான பஸ் கட்டணத்தை செலுத்த முடியாத நிலையில் நம் நாட்டில் லட்சக்கணக்கான மாணவர்கள் அவதியுற்று வருகிறார்கள் எனவே வவுனியாவைச் சேர்ந்த இரு இளைஞர்களின் இச்சாதனை முயற்சி வெற்றிபெற வேண்டும் என தெரிவித்தனர்.

இவ் விழிப்புணர்வு நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், ம.தியாகராஜா, சமூகசேவைகள் திணைக்களத்தின் உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன், மாவட்ட கலாசார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன், தமிழ் மணி அகளங்கள், தமிழ் அருவி சிவகுமாரன், பிரதேச செயலாளர் க. உதயராசா, மற்றும் பாடசாலை மணவர்கள் ஆசிரியர் என பெருமளவானோர் கலந்துகொண்டிருந்தனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seven + 15 =

*