;
Athirady Tamil News

சுற்றிவளைப்புக்கு சென்ற காவற்துறையினர் பரிதாப நிலையில்..!!

0

ஆனமடுவ – தோனிகல பிரதேசத்தில் காவற்துறையினரை தாக்கிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் இன்று ஆனமடுவ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

ஆனமடுவ – தோனிகல பிரதேசத்தில் சட்டவிரோத மதுபான நிலையமொன்றை சுற்றிவளைப்பதற்காக காவற்துறை அதிகாரிகள் நேற்று இரவு சென்றிருந்த நிலையில் இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகினர்.

இந்த சம்பவத்தில் 3 காவற்துறை அதிகாரிகள் காயமடைந்துள்ளனதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

காயமடைந்தவர்கள் ஆனமடுவ மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக புத்தளம் ஆதார மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seven + 11 =

*