;
Athirady Tamil News

சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் பினராயி விஜயனுக்கு மருத்துவ பரிசோதனை..!!

0

கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், உடல்நலக்குறைவு காரணமாக இன்று சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் திடீரென அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் பரவியது. இதை கேரள முதல்-மந்திரியின் செயலாளர் மறுத்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்-மந்திரி அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் பினராயி விஜயன், வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்காக அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இது ஏற்கனவே திட்டமிட்டது தான். அவருடன் அவரது மனைவியும் சென்றுள்ளார். நாளை பினராயி விஜயன் கேரளா திரும்புவார் என கூறப்பட்டு உள்ளது.

பினராயி விஜயன் மருத்துவமனைக்கு வந்திருப்பதை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகமும் உறுதிபடுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen − thirteen =

*