;
Athirady Tamil News

மட்டகளப்பில் பரபரப்பு, குடும்பஸ்தரொருவர் மர்ம நபரால் வெட்டிகொலை..!! (படங்கள்)

0


மட்டக்களப்பு குடும்பஸ்தரொருவர் இனந்தெரியாத மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.கொலைசெய்யப்பட்ட நபர் 39 ஆம் கிராமத்தில் வயல்வெளி ஊடாக வந்துகொண்டிருந்தவரை வழிமறித்த சிலர் சரமாரியாக வெட்டியுள்ளனர்.

படுகாயமடைந்த 39 ஆம் கிராமத்தினை சேர்ந்த 49 வயதான கமலேஸ்வரன் என்பவர் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்வேளை உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…..

You might also like

Leave A Reply

Your email address will not be published.

10 − 7 =

*