;
Athirady Tamil News

ஆயுதங்களுடன் மூன்று பேர் கைது…!!

0

கம்பஹா, கொட்டுகொட பகுதியில் மூன்று பேர் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்து கம்பஹா தலைமையக அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நான்கு வீடுகளில் சோதனை நடத்திய போது அவர்களுடமிருந்து டீ 56 ரக துப்பாக்கி ஒன்றும் அதற்கான 58 ரவைகளும், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட தானியங்கி துப்பாக்கி ஒன்றும் அதற்கான 08 ரவைகளும் மற்றும் 38 வகையான ரிவோல்வர் ஒன்றும் அதற்கான 3 ரவைகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.

சந்தேகநபர்கள் கொட்டுகொட மற்றும் உடுகம்பொல பிரதேசத்தை சேர்ந்த 29,31 மற்றும் 41 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கம்பஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 + 3 =

*