;
Athirady Tamil News

தர்மராஜ பிரிவெனா விகாரையில் புதிய இரண்டு மாடிக்கட்டடம் ஜனாதிபதியினால் திறப்பு…!!

0

மெதிரிகிரிய, திவுலங்கடவல, தர்மராஜ பிரிவெனா விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இரண்டு மாடிக் கட்டடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்று திறந்துவைக்கப்பட்டது.

எழுச்சிபெறும் பொலன்னறுவை’ மாவட்ட அபிவிருத்தி செயற்திட்டத்தின்பி பிரிவெனா அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இந்த இரண்டு மாடிக்கட்டிடத்தின் நிர்மாணப் பணிகளுக்காக மதிப்பிடப்பட்ட செலவு 120 இலட்சம் ரூபாவாக காணப்பட்டபோதிலும் இலங்கை இராணுவத்தினரின் பங்களிப்பினால் மேற்கொள்ளப்பட்ட இந்த கட்டட நிர்மாணத்திற்கு 69 இலட்சம் ரூபா மாத்திரமே செலவிடப்பட்டுள்ளது.

விகாரைக்குச் சென்ற ஜனாதிபதி முதலில் சமய அனுஷ்டானங்களில் ஈடுபட்டு ஆசீர்வாதத்தை பெற்றுக்கொண்டார்.

நிகழ்வில் ஜனாதிபதி உரையாற்றுகையில்,

சிறந்த ஒரு சமூகத்தையும் கல்விகற்ற புத்திசாதுர்யமான எதிர்கால சந்ததியினரை உருவாக்குவதற்கான பொறுப்பினை நிறைவேற்றுவதற்கு சகலரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் .

சிறந்த ஒரு சமூகத்தை கட்டியெழுப்புவதில் மிக முக்கிய காரணமான சமயக் கல்வியை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் விசேட செயற்திட்டங்களை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, நாடு முழுவதும் பல்வேறு சமய கல்விக்கூடங்களில் காணப்படும் பல குறைபாடுகளை நிவர்த்தி செய்து அவற்றிற்கு தேவையான வளங்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

பொலன்னறுவை மாவட்ட அபிவிருத்தி தொடர்பாக இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, இவ்வருட இறுதிக்குள் பொலன்னறுவை மாவட்ட பாடசாலைகள், மருத்துவமனைகள் மற்றும் பிரிவெனாக்கள் என்வற்றில் எந்தவித குறைபாடுகளுமின்றி அவை நிவர்த்திக்கப்படும் என்று சுட்டிக்காட்டினார்.

பொலன்னறுவை மாவட்டத்தின் 15 பிரிவெனாக்களுக்கும் அவசியமான நூலக புத்தக தொகுதிகள் இதன் போது ஜனாதிபதியினால் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் இலங்கை ராமஞ்ஞ மகா நிக்காயவின் தர்மராஜ பிரிவெனா பணிப்பாளர் வண. அரமங்கொட ஜோதிரத்தன நாயக்க தேரர், பிரிவென பணிப்பாளர் பேராசிரியர் வண. நாபிரித்தன்கடவல ஞானரத்தன தேரர், வடமத்திய உதவிக் கல்விப் பணிப்பாளர் வண. மாவத்தவெவே ரத்தனவங்ச தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினரும், வடமத்திய மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் சம்பத் ஸ்ரீ நிலந்த உள்ளிட்ட மக்கள்பி ரதிநிதிகளும், பிரதேசவாசிகள் உள்ளிட்ட பெருந்தொகையான மக்களும் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 + 3 =

*