;
Athirady Tamil News

நெருக்­க­டிக்கு மத்­தி­யில் கூடு­கி­றது ஐ.தே.க…!!

0

ஐக்­கிய தேசி­யக் கட்­சிக்­குள் ஏற்­பட்­டுள்ள பிள­வு­க­ளுக்கு தீர்­வு­கா­ணும் வகை­யில் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­ சிங்­க­வால் நிய­மிக்­கப்­பட்­டுள்ள கட்­சியை மறு­சீ­ர­மைப்­ப­தற்­கான குழு இன்று முதல்­த­ட­வை­யா­கக் கூட­வுள்­ளது என்று அந்­தக் கட்­சி­யின் தக­வல் அறி­யும் வட்­டா­ரங்­க­ளி­லி­ருந்து அறி­ய­மு­டி­கின்­றது.

பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்­சர் தலை­மை­யில் நிய­மிக்­கப்­பட்­டுள்ள இந்­தக் குழு­வில் மூத்த உறுப்­பி­னர்­கள் சில­ரும், பின்­வ­ரிசை நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் சில­ரும் தலைமை அமைச்­ச­ரால் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

உள்­ளூ­ராட்­சித் தேர்­தல் நடை­பெற்று முடிந்­தது முதல் பல்­வேறு நெருக்­க­டி­க­ளுக்கு மத்­தி­யில் கூட்டு அர­சின் தொடர்ச்­சி­யான பய­ணத்­துக்கு அரச தலை­வர் பச்­சைக்­கொடி காட்­டி­யி­ருந்­தார். அமைச்­ச­ர­வை­யி­லும் மறு­சீ­ர­மைப்­பு­கள் செய்­யப்­பட்­டுள்­ளன.

மறு­பு­றத்­தில் கட்­சி­யின் தலை­மைத்­து­வத்­துக்கு எதி­ராக ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யில் எழுந்த எதிர்ப்­பு­களை பல­கட்டப் பேச்­சு­க­ளின் பின்­னர் சுமு­க­நி­லைக்கு அதன் தலை­வ­ரான ரணில் கொண்­டு­வந்­தி­ருந்­த­போ­தி­லும், இரா­ஜாங்க அமைச்­சர்­க­ளான பாலித ரங்கே பண்­டார, வசந்த சேனநா­யக்க உள்­ளிட்ட சிலர் தொடர்ச்­சி­யாக ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை கட்­சி­யின் தலை­வர் பத­வி­யி­லி­ருந்­தும், தலைமை அமைச்­சர் பத­வி­யி­லி­ருந்­தும் நீக்­க­வேண்­டும் என்ற உடும்­புப்­பி­டி­யில் உள்­ள­னர்.

ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ராக நாடா­ளு­மன்­றில் நம்­பிக்­கை­யில்­லாப் பிரே­ர­ணை­யொன்­றைக் கொண்­டு­வ­ர­வும் தாங்­கள் தயங்­கப்­போ­வ­தில்­லை­யென பாலித ரங்கே பண்­டார எச்­ச­ரிக்கை விடுத்­தி­ருந்­தார். மிக­வும் நெருக்­க­டி­யான சூழ்­நி­லை­யின் மத்­தி­யி­லேயே ருவான் விஜே­வர்­தன தலை­மை­யி­லான குழு இன்று கூடு­கி­றது.

முன்­னர் கட்­சி­யின் தலை­மைத்­து­வத்தை சஜித் பிரே­ம­தா­ஸ­வுக்கு வழங்­கு­வது தொடர்­பி­லும், ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை கட்­சி­யின் மூத்த தலை­வ­ராக நிய­மிப்­பது குறித்­தும் கலந்­து­ரை­யா­டப்­பட்­டி­ருந்­தா­கத் தக­வல்­கள் வெளி­யா­கி­யி­ருந்­தன.

இன்று கூட­வுள்ள ருவான் விஜே­வர்­தன தலை­மை­யி­லான குழு­வின் கூட்­டத்­தில் பல­ரின் நிலைப்­பா­டு­கள் வெளி­யா­கு­மென எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 3 =

*