;
Athirady Tamil News

யாழ். வீதிகளை அலங்கரித்த மிக பழமையான கார்கள்…!! (படங்கள் & வீடியோ)

0

கொழும்பு விண்டேஜ் கார் உரிமையாளர்கள் சங்கத்தின் 30வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக, பிரித்தானிய காலத்து மிக பழமையான கார்கள் நேற்று (வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாணத்திற்கு சென்றடைந்தது.

நேற்றுமுன்தினம் 1ஆம் திகதி கொழும்பில் இருந்து ஆரம்பித்த பழமைவாய்ந்த பதினெட்டு கார் வகை வாகனங்களும் இரண்டுமோட்டார் சைக்கிளும் பேரணியாக அநுராதபுரம் வந்தடைந்து அங்கிருந்து மீண்டும் நேற்று மாலை யாழ். நகரை வந்தடைந்தது.

இன்று காலை 08.30 மணியளவில் யாழ்ப்பாணம் கோட்டை ஊடாக நல்லூர் வீதி வழியாக பேரணியாக சென்ற கார்கள், மீண்டும் அநுராதபுரம் ஊடாக கொழும்பு சென்றடையவுள்ளது.

இன்று காலை வாகன பேரணி யாழ். கோட்டையை வந்தடைந்த போது வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் றோசான் பெனாண்டோ பேரணியாக வந்த வாகனங்களினை பார்வையிட்டார். மிகவும் பழமை வாய்ந்த வாகன பேரணியை பெருமளவிலான பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…..

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 − 4 =

*