;
Athirady Tamil News

சிரியா இனப்படுகொலையை கண்டித்து மலையகத்தில் ஆர்ப்பாட்டம்…!! (படங்கள்)

0

சிரியாவில் இடம்பெற்று வரும் இனப்படுகொலையை கண்டித்து மலையகத்தில் கண்டனப்போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

நுவரெலியா – நாகசேனை நகரப்பகுதியில் இளைஞர் யுவதிகளினால் நேற்று (சனிக்கிழமை) மதியம் இந்தக் கண்டனப்போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

சிரியா நாட்டில் குழந்தைகள் மற்றும் பெண்கள் அதிகளவாக படுகொலை செய்யப்படுகின்றமை, ஐக்கிய நாடுகள் சபை இவ்விடயத்தில் கவனம் செலுத்தாமை ஆகியவற்றை எதிர்த்து மலையக இளைஞர், யுவதிகளால் கண்டனப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

சிரியாவில் தற்போது இடம்பெறுகின்ற இனப்படுகொலை, ஒருகாலத்தில் இலங்கையிலும் இடம்பெற்றிருந்தது. இந்தவகையில் மலையக மக்கள் சார்பில் சிரிய மக்களுக்காக குரல் கொடுக்கின்றோம் என, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் யுவதிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், சிரியா யுத்தத்தில் உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மெழுகுவர்த்திகளை ஏற்றி அஞ்சலி செலுத்தியமையும் குறிப்பிடத்தக்கது.

“அதிரடி” இணையத்துக்காக மலையகத்தில் இருந்து “மலையூரான்”

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…..

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 + 1 =

*