;
Athirady Tamil News

ஹட்டனில் விபத்து : ஒருவர் காயம்…!! (படங்கள்)

0

ஹட்டன், மல்லியப்புர பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹட்டனிலிருந்து கொழும்பு நோக்கி இன்று (சனிக்கிழமை) பயணித்த பால் சேகரிப்பில் ஈடுபடும் பவுஸர் வண்டியொன்றுடன், ஹட்டன் பகுதியை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த சாரதி படுகாயமடைந்த நிலையில் டிக்கோயா, கிளங்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்தமையே விபத்துக்கு காரணமென தெரிவித்த ஹட்டன் பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

“அதிரடி” இணையத்துக்காக மலையகத்தில் இருந்து “மலையூரான்”

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…..

You might also like

Leave A Reply

Your email address will not be published.

6 + ten =

*