;
Athirady Tamil News

சிரியா இனப் படுகொலையை கண்டித்து மன்னாரில் போராட்டம்…!! (படங்கள்)

0

சிரியாவில் இடம்பெற்று வரும் இனப் படுகொலையை கண்டித்து மன்னார் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக கண்டனப்போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், அதன் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் நேற்று (சனிக்கிழமை) காலை 10 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிரியாவில் இடம்பெற்று வருகின்ற படுகொலையுடன் தொடர்புடைய படங்களை ஏந்திய நிலையில் கண்டனப் போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.

இதில் மூர்வீதி ஜீம்மா பள்ளி வாசல் மௌலவி எம்.அசீம், மன்னார் நகர சபை உறுப்பினர் என்.நகுசீன், மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய பிரதிநிதிகள், மனித உரிமை ஆர்வலர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த போராட்டத்தை தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணையாளருக்கு எழுதப்பட்ட மகஜர் வாசிக்கப்பட்டதுடன், உரிய அதிகாரிகளினூடாக அனுப்பி வைக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

“அதிரடி” இணையத்துக்காக மன்னாரில் இருந்து “இராவணேஸ்வரன்”

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…..

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × four =

*