;
Athirady Tamil News

ஒரே நாளில் 9300 வழக்குபதிவு செய்து டெல்லி போலீசார் அதிரடி..!!

0

டெல்லியில் ஹோலி பண்டிகை கொண்டாட்டங்களின் போது போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டதற்காக ஒரே நாளில் சுமார் 9300க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் ஹோலி பண்டிகை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாப்பட்டது. இந்த பண்டிகை கொண்டாட்டங்களின்போது எந்தவித அசம்பாவிதங்கள் நடக்ககூடாது என போலீசார் மிகவும் கவனத்துடன் செயல்பட்டனர். அதில் குறிப்பாக போக்குவரத்து போலீசாரின் பங்களிப்பு அதிகமாகவே இருந்தது.

போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுத்துள்ளனர். குடித்து விட்டு வாகனம் ஒட்டியது, அதிவேகமாக வாகனம் ஓட்டியது மற்றும் இரு சக்கர வாகனத்தில் இரண்டு பேருக்கும் மேற்பட்டோர் பயணித்தல் உட்பட பல குற்றங்களின் கீழ் ஒரே நாளில் சுமார் 9300 பேர் மீது டெல்லி போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து போக்குவரத்து போலீசார் தரப்பில் கூறியதாவது, ஹோலி பண்டிகை கொண்டாட்டங்களின்போது தீவிர வாகனச்சோதனையில் ஈடுபட்டோம். அப்போது குடித்துவிட்டு வண்டி ஒட்டிய 1918 மீது வழக்குப்பதிவு செய்துள்ளோம். அதில் 608 பேர் நகரின் தெற்குப்பகுதிகளை சேர்ந்தவர்களாவர். 4634 பேர் ஹெல்மேட் அணியாமல் சென்றதாலும், 1164 பேர் இரு சக்கர வாகனத்தில் மூன்று நபர்களாய் பயணித்ததாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம். மேலும் 1589 பேர் மீது மற்ற குற்றங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளோம் என தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 1 =

*