;
Athirady Tamil News

கூடுதல் ஆதாரங்களை திரட்ட கார்த்தி சிதம்பரத்தை மும்பை அழைத்துச் சென்று சி.பி.ஐ விசாரணை..!!

0

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரம் கடந்த மாதம் 28-ம் தேதி சென்னையில் சி.பி.ஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதனை அடுத்து, டெல்லி அழைத்துச் சென்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை ஒரு நாள் விசாரிக்க கோர்ட் அனுமதி வழங்கியது.

பின்னர், மீண்டும் கடந்த 1-ம் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 6 நாட்கள் விசாரிக்க சி.பி.ஐ.க்கு நீதிபதி அனுமதி வழங்கினார். இதனை அடுத்து, கார்த்தி சிதம்பரத்திடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். ஐ.என்.எக்ஸ் நிறுவனத்தின் இயக்குநராக இருந்த இந்திராணி முகர்ஜி அளித்திருந்த வாக்குமூலத்தை கொண்டு அவரிடன் துருவித்துருவி விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில், நாளை மறுநாளுடன் விசாரணைக்காவல் முடிவடைய உள்ள நிலையில், கார்த்தி சிதம்பரத்தை சி.பி.ஐ அதிகாரிகள் மும்பை அழைத்துச் சென்றுள்ளனர். வழக்கில் கூடுதல் ஆதாரங்களை திரட்டும் வகையில் அவரை மும்பை அழைத்துச் சென்று சி.பி.ஐ விசாரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

9 + five =

*