;
Athirady Tamil News

இலங்கையில் சிறுமிக்கு அதிஷ்டவசமாக கிடைத்த தங்கச் சிலை…!!

0

புத்தளத்தில் சிறுமி ஒருவருக்கு அதிஷ்டமாக தங்க சிலை கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புத்தளம் ரஜவிகம பிரதேசத்தை சேர்ந்த 11 வயது சிறுமி ஒருவருக்கு இந்த சிலை கிடைத்ததாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

கடந்த 27ஆம் திகதி வீட்டுத் தோட்டத்தில் இருந்து இந்த சிலையை சிறுமி கண்டெடுத்துள்ளார். 4 அங்குல உயரத்திலுள்ள இந்த சிலை சுமார் 500 கிராம் நிறையுடைய தங்கம் என கருவலகஸ்வெவ பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்று காலை ரஜவிகம கிராம சேவகரினால் இந்த சிலை பொலிஸாரின் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளது. சிறுமியினால் கண்டெடுக்கப்பட்ட சிலை தொடர்பில் அறிந்து கொண்ட கிராம மக்கள் கிராம சேவகர் மற்றும் பொலிஸாரிடம் தகவல் அறிவித்துள்ளனர்.

அதற்கமைய ரஜவிகம கிராம சேவகர் சிலையை ஏற்றுக் கொண்டு அதனை பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

இந்த சிலை புதையலில் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்டதற்கான சான்றுகள் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × two =

*