;
Athirady Tamil News

விவசாய பயிர்செய்கை மேற்கொள்ளப்படும் தோட்டமொன்றில் சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வு…!!

0

பொகவந்தலாவ தெரேசியா தோட்டபகுதியில் விவசாய பயிர்செய்கை மேற்கொள்ளப்படும் தோட்டமொன்றில் சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட மூவரைக் கைது செய்துள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (04.03.2018) ஞாயிற்றுகிழமை விடியற்காலை 2 மணியளவில் இவர்கள் கைது செய்யபட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். பொகவந்தலாவ பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யபட்டதாகவும், இவர்கள் பலாங்கொடை பகுதியை சேர்ந்தவர்கள் எனவும், பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதேவேளை மாணிக்ககல் அகழ்விற்கு பயன்படுத்தபட்ட ஒரு சில உபகரணங்களையும் பொலிஸார் கைபற்றியுள்ளதாகவும் குறிப்பிட்டனர். கைது செய்யபட்ட மூவரையும் அட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen + seventeen =

*