;
Athirady Tamil News

தற்போதைய கல்வி முறையில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான மாற்றங்கள்…!!

0

தற்போதைய கல்வி முறையில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான மாற்றங்கள் இடம்பெற்றுவருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பட்டதாரிகள் நாட்டில் வளங்களாக கருதப்பட வேண்டியவர்கள்.

அந்த வளங்களை அரசாங்கம் முறையாக பயன்படுத்தப்பட வேண்டும்.

இலங்கையின் கல்வி முறையில் உள்ள குறைபாடுகள் காரணமாக பட்டதாரிகள் வீதியில் இருந்து போராடிவருகின்றனர்.

இதற்கு மாணவர்கள் காரணமல்ல, கல்விமுறையில் உள்ள குறைபாடே இதற்கு காரணம்.

இத்தகைய கல்வி முறைமையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.

அனைத்து பட்டதாரிகளுக்கும் தொழில்வாய்ப்பை பெற்றுக்கொடுத்து அவர்களின் ஆற்றலை நாட்டின் அபிவிருத்திகாக பயன்படுத்துவதற்கான முயற்சிகள் செய்யப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 − ten =

*