;
Athirady Tamil News

அபிவிருத்தி செய்யப்படவுள்ள சில வீதிகள் – 300 மில்லியன் ரூபா ஒதுக்கீடு…!!

0

நாட்டிலுள்ள சில வீதிக் கட்டமைப்புக்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி அம்பாறை திருகோணமலை மாவட்டங்களில் உள்ள வீதிக் கட்டமைப்புக்களை அபிவிருத்தி செய்யும் இந்த வேலைத்திட்டத்தை, நகரத் திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சு அமுல்படுத்தவுள்ளது.

மேற்படி திட்டத்தின்படி, அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சோனை, ஒலுவில், பாலமுனை ஆகிய இடங்களில் உள்ள வீதிகள் அபிவிருத்தி செய்யப்பட இருப்பதோடு, திருகோணமலை மாவட்டத்தில் இறக்கக்கண்டி, தோப்பூர், தம்பலகாமம் ஆகிய பகுதிகளில் உள்ள வீதிகளும் அபிவிருத்தி செய்யப்பட உள்ளன. வீதிக் கட்டமைப்புக்களை அபிவிருத்தி செய்யும் இந்த வேலைத்திட்டத்தை 300 மில்லியன் ரூபாவிற்கு மேற்பட்ட தொகை செலவிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen − fifteen =

*