;
Athirady Tamil News

கட்டுமுறிப்பு மக்களின் வாழ்வாதாரத்திற்கு கைகொடுத்த தனியார் அமைப்பு…!! (படங்கள்)

0

கிழக்கு மாகாணத்தில் வாகரை கதிரவெளிப் பிரதேசத்தில் இருந்து இடது பக்ககமாக சுமார் இருபத்து இரண்டு கிலோமீட்டர் துரத்தில் அமைந்துள்ளதுதான் கட்டுமுறிப்பு மற்றும் ஆண்டாங்குளம் எனும் கிராமங்கள் இந்த கிராமங்கள் கட்டுமுறிப்புக்குளம் மற்றும் ஆண்டான்குளத்தை மையமாகக் கொண்டு சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்னர் பொலன்னறுவை, வாகரை,குருநாகல் ,வாழைச்சேனை ஆகிய பகுதியில் இருந்த மக்கள் குடியேறி உள்ளனர் விவசாயத்தையும் ,மீன்பிடியையும் பிரதானமாகக் கொண்டே வாழ்ந்து வருகின்றார்கள்.

இவர்கள் யுத்த சூழ்நிலையில் இடம்பெயர்ந்து மீண்டும் 2007 ம் ஆண்டு மீள்குடியேற்றம் செய்யப்பட்டு வாழந்து வருகின்றார்கள் இவர்களுக்கான அடிப்படை வசதிகளான மலசல கூடம் ,கிணறு என்பன குறைவாகவே காணப்படுகின்றது பொதுக் கிணறுகளே பாவிக்கப்படுகின்றது வைத்திய சாலைக்கு சுமார் இருபது கிலோமீட்டர் துரத்தை ஒருமணிநேரம் பயணம் செய்தே செல்கின்றார்கள்

இவ் இரண்டு கிராமத்திலும் சுமார் 230 க்கும் மேற்ப்பட குடும்பங்கள் வாழ்ந்துவருகின்றார்கள் இவர்கள் குடியமர்ந்த காலம் முதல் இவர்களுக்கான போக்குவரத்து பாதைகள் புனரமைப்பு எனும் போர்வையில் சில இடங்கள் அரைகுரைகாக செய்யப்பட்டு ஏமாற்றப்பட்டு உள்ளது

இவ்வாறு பல பிரச்சனைகளுடன் வாழும் இவ் மக்களின் நிலைமைகளை டென்மார்க்கில் இருந்து வாணி தனேஸ் அவர்களின் தலையில் இயங்கிவரும் வாணி சமூக பொருளாதார மேம்பாட்டு நிறுவனத்தாருக்கே சமூக ஆர்வலர்கள் தகவல் வழங்கியதனை தொடர்ந்து முதல்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட பத்து கும்பங்களுக்கு இரண்டு இரண்டு குடும்பங்கள் இணைந்து தொழில் செய்யக் கூடியவாறு ஐந்து தோணிகளும், நான்கு குடும்பங்களுக்கு கோழி மற்றும் கோழிக்கூடு என்பனவும் பத்துக் குடும்பங்களுக்கு வீச்சு வலைகளும் இருபது குடும்பகளுக்கு கட்டு வலைகளும் ஆறு குடும்பங்களுக்கு தற்காலிக வீடும் மாணவி ஒருவருக்கு துவிச்சக்கார வண்டி ஒன்றும் இவ் அமைப்பினரால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது

இவ்வாறு இவ் வாழ்வாதாரத்தை தனியார் அமைப்புக்கள் செய்தாலும் அடிப்படை வசதிககள் அனைத்தையும் இவ் மக்களுக்கு செய்யவேண்டிய பொறுப்பு அதிகாரிகளுக்கும் அரசுக்கும் அரசியல்வாதிகளுக்குமே உண்டு இவ்வளவு காலமும் இவர்கள் என்ன செய்துள்ளார்கள் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

“.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.

10 + fourteen =

*