;
Athirady Tamil News

சிவனொளிபாதமலையினை தரிசிக்க சென்ற 8 பேர் கஞ்சாவுடன் கைது…!!

0

சிவனொளிபாதமலையினை தரிசிப்பதற்காக சென்ற 8 பேரிடமிருந்து ஒரு தொகை கஞ்சா பக்கட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

மதுபோதையில் இருந்தவர்களையும் நேற்று(03.03.2018) சனிக்கிழமை மாலை ஹற்றன் குற்றத்தடுப்பு விசேட பிரிவினரால் கோரா என்ற மோப்ப நாயின் உதவியுடன் கைது செய்துள்ளனர்.

நாட்டில் பல பிரதேசங்களிலிருந்து சிவனொளிபாதமலையினை தரிசிப்பதற்காக சென்றவர்களிடமிருந்தே மேற்படி கஞ்சா பக்கட்கள் கைப்பற்றப்பட்டன.

ஹற்றன் கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை தொடக்கம் ஹற்றன் மல்லியப்பு வரையிலான பகுதிகளிலும், தியகல பகுதிகளிலும் நேற்று(03.03.2018) சனிக்கிழமை மாலை பல வாகனங்களை தீடிரென ஹற்றன் குற்றத்தடுப்பு விசேட பிரிவினர் சோதனை செய்தனர்.

இதன்போது வெவ்வேறு வாகனங்களில் பயணித்த எட்டு பேரிடமிருந்து கஞ்சா பக்கட்கள் கைப்பற்றப்பட்டன.

இதனையடுத்து குறித்த எட்டு பேரையும் கைது செய்த ஹற்றன் குற்றத்தடுப்பு விசேட பிரிவினர், ஹற்றன் நீதவான் முன்னிலையில் ஆஜர்செய்ய நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக பொலிஸாா் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four − 4 =

*