;
Athirady Tamil News

பாடசாலை மாணவா்களிற்கு இராணுவத்தினரால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு…!! (படங்கள்)

0

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பகுதியில் பாடசாலை மாணவ மாணவிகளிற்கு இராணுவத்தினரால் பாடசாலை உபகரனங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

யாழ்ப்பாண பாதுகாப்பு படை தலைமையகம் கட்டளை தளபதி மேஜா் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சியின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவ மாணவிகள் 30 பேருக்கு பாடசாலை உபகரனங்கள் வழங்கும் நிகழ்வு நேற்றையதினம்(03-03-2018) யாழ்ப்பாணம் கீரிமலை நல்லினக்கபுரம் கிராமத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் யாழ்ப்பாண பாதுகாப்பு படை தலைமையகம் கட்டளை தளபதி மேஜா் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சியின் 51 படை பிரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ரொசான் செனவிரத்தின, பிரதேசய மக்கள் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

11 − 5 =

*