;
Athirady Tamil News

அரைகுறையாக புனரமைக்கப்பட்ட பொகவந்தலாவ இலட்சுமி தோட்ட மைதான மேடை…!! (படங்கள்)

0

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஊடாக கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக பொகவந்தலாவ இலட்சுமி தோட்ட மத்திய பிரிவில் உள்ள விளையாட்டு மைதானத்தில் மேடை ஒன்றுக்கான அடிகல் நாட்டப்பட்டது.

இதில் குறித்த தோட்ட பகுதியில் இரண்டரை இலட்சம் ருபா செலவில் பொகவந்தலாவ இலட்சுமி மத்திய பிரிவு தோட்டத்தில் உள்ள மைதானத்தல் மேடை ஒன்று அமைப்பதற்கு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் 75 ஆயிரம் ருபா நிதி வழங்கபட்டது.

இதற்கமைய குறித்த தோட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட மேடை அமைப்பானது இடை நடுவில் கைவிட பட்டதாகவும், இந்த மேடையினை அமைப்பதற்கு பொகவந்தலாவ இலட்சுமி மத்திய பிரிவு தோட்ட மக்களால் 500 ரூபா வீதம் 50 ஆயிரம் ரூபா பணமும் தோட்ட இளைஞர்களால் மேடை அமைப்பதற்கான பொருட்கள் பணமும் வழங்கபட்டுள்ளதாகவும் பொகவந்தலாவ இலட்சுமி மத்திய பிரிவு தோட்ட மக்கள் தெரிவித்தனர்.

இருந்த போதிலும் குறித்த மேடை முழுமையாக புனரமைப்பு செய்யபடவில்லை என தோட்ட மக்கள் மற்றும் இளைஞர்கள் சுட்டிகாட்டுகின்றனர்.

நாடளாவிய ரீதியில் ஒரே தினத்தில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் அடிகல் நாட்டப்பட்டு ஒவ்வொரு பகுதியில் முன்னெடுக்கபட்ட வேலைதிட்டங்கள் நிறைவு பெற்று திறப்ப விழா செய்யப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கபட்டுள்ளது.

ஆனால் இலட்சுமி மத்திய பிரிவு தோட்டத்தில் மாத்திரம் இதுவரை காலப்பகுதியிலும் குறித்த மைதான மேடையின் புனரமைப்பு பணிகள் முழுமை பெறாமல் இருப்பதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

எனவே இந்த பொகவந்தலாவ இலட்சுமி மத்திய பிரிவில் அறைகுறையாக புனரைமக்கப்பட்டுள்ள மேடை குறித்து தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பொது முகாமையாளர் நடவடிக்கை எடுக்கவேண்டுமென கோரிக்கை விடுக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × five =

*