;
Athirady Tamil News

வாதரவத்தையில் சமூக சேவைகள் அமையம் திறந்து வைப்பு…!!

0

யாழ்ப்பாணம் வலிகாமம் கிழக்கு வாதரவத்தை பகுதியில் , வாதரவத்தை உதவும் கரங்கள் அமையம் எனும் பெயரில் சமூக சேவைகள் அமையம் ஒன்று நேற்று(03-03-2018) திறந்துவைக்கப்பட்டது.

வாதரவத்தை இளைஞர்கள் ஒன்றிணைந்து சமூக சேவைகள் அமையம் ஒன்றை இன்று அங்குரார்ப்பணம் செய்து வைத்தனர்.

ஆசிரியர் பத்மதாசன் தலைமையில் நேற்று பிற்பகல் 4 மணியளவில் இவ் நிகழ்வு இடம்பெற்றது.

வாதரவத்தையின் பாடசாலை மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் மாணவர்களுக்கு ஊக்குவிப்பாக இருப்பதும் , அமைப்பினூடாக மாணவர்களுக்கு கற்றல் உதவிகளை வழங்குவதும், பிரதான நோக்கமாக கொள்ளப்பட்டு இந்த சமூக சேவைகள் அமையம் திறந்துவைக்கப்பட்டது.

வாதரவத்தை மாணவர்கள் மேலதிக கற்றல் நடவடிக்கைகளுக்கு அயல் பிரதேசங்களுக்கு சென்று கற்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலையும் காணப்படுவதோடு , அப்பிரதேசத்தில் போக்குவரத்து வசதிகளும் குன்றிய நிலையில் காணப்படுகின்றது.

இந்த நிலையில் வடமாகாண சமூக சேவைகள் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அண்மையில் வாதரவத்தைக்கு போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பேன் என்று கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

6 − 5 =

*