;
Athirady Tamil News

சங்கீத அறைக்குள் சென்ற மாணவி திடீரென மரணம்…!!

0

பாடசாலையில் மயங்கி விழுந்த மாணவி ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் கண்டி கம்­பளை கல்வி வலயத்துக்கு உட்பட்ட அட்­ட­பாகே உட­கம மகா வித்­தி­யாலயத்தில் நடந்துள்ளது.

தரம் 11 இல் கல்வி கற்கும் 16 வயது மாணவி பாட­சா­லையின் சங்­கீத அறையில் பயிற்சி பெற்று விட்டு நடன அறைக்கு சென்ற வேளையில் மயங்கினார் என்று கூறப்படுகிறது.

உட­கம கிரா­மிய மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட மாணவி, கம்­பளை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மில்­ல­கா­முல்லை தெனி­ய­கம பிர­தே­சத்தைச் சேர்ந்த மாணவியே உயிரிழந்தார்.

மூளைக்குக் குருதி செல்லும் நரம்பு ஒன்று வீங்கி வெடித்­ததால் இறப்பு நிகழ்ந்தது என்று மருத்துவர்கள் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twelve + 9 =

*