;
Athirady Tamil News

சதித் திட்டங்களை முறியடிப்போம்…!!

0

கடந்த உள்ளூராட்சித் தேர்தலில், வீட்டுக்கு எதிராக உதயசூரியனின் கீழ் ஒரு மாற்று அணியை உருவாக்கும் முயற்சி ஆரம்பமான போதே தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு எதிரான சதித் திட்டங்களும் உருவாக்க ஆரம்பித்து விட்டது.

அதன் ஒரு அங்கம்தான் தலைவருக்கும், ஆனந்தசங்கரிக்கும் எதிரான முரண்பாடாகவும் கட்சி இரண்டாகியதாகவும் வெளியான தகவல்கள்.

கட்சியின் சிரேஷ்ட உபதலைவரின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் ஒரு அஞ்சலிக் கூட்டம் கட்சியின் யாழ் அலுவலகத்தில் கூட்டப்பட்டது.

ஆனால், அது ஒரு மத்திய குழுக் கூட்டம் என்றும், தலைவருக்குத் தெரியாமல் நடப்பதாகவும் சில விஷமிகளால் அவருக்கு தகவல் கூறப்பட்டது. அதனால், தலைவர் திடீரென வந்து கூட்டத்தில் புகுந்ததால் ஏற்பட்ட தவறான புரிந்துணர்வால் வந்த குழப்பம் தான் இது.

அரசியல் கூட்டங்களின்போது வழக்கமாகவே நடைபெறும் சிறு வாக்குவாதம் ஊதிப் பெருப்பிக்கப் பட்டுள்ளது. இதற்கு கட்சியின் சில உறுப்பினர்களும் துணை போய் உள்ளார்கள். 40 ஆண்டுகளுக்கும் அதிகமாக பிரித்தானியாவில் வசித்துவருபவர் தலைவர்.

குரலை சற்று உயர்த்திக் கதைத்தாலே வன்முறையாகப் பார்க்கும் சமூக அமைப்பில் வளர்த்தவர் (Zero Tolerance). அதனால், சிலரின் தூண்டுதலால் உடனடியாக போலீஸ் நிலையம் போய் விட்டார். கட்சி மட்டத்தில் அனைத்தும் சுமுகமாக தீர்க்கப்பட்டு விட்டது. கட்சியில் பிளவினை எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறோம்.

பரமசிவம் சிறீதரன்
சட்டம் மற்றும் சர்வதேச விவகாரங்களுக்கான செயலாளர்
தமிழர் விடுதலைக் கூட்டணி

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 − 8 =

*