;
Athirady Tamil News

மோசடியில் உடந்தையாக இருந்தவர்களுக்கு தங்க-வைர நகைகள் லஞ்சமாக கொடுத்த நிரவ்மோடி..!!

0

மும்பை வைர வியாபாரியும் தொழில் அதிபருமான நிரவ்மோடியும் அவரது உறவினர் மெகுல் சோக் ஷியும் பஞ்சாப் நே‌ஷனல் வங்கி கிளை மூலம் ரூ.11,700 கோடி மோசடியில் ஈடுபட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டனர்.

வங்கி மோசடி தொடர்பாக சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறை அதிகாரிகளும் வழக்குபதிவு செய்துள்ளனர். வெளி நாட்டில் இருக்கும் நிரவ் மோடி குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை இந்தியாவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

மேலும் இந்தியாவில் உள்ள நிரவ் மோடியின் நிறுவனங்களும், சொத்துக்களும், வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.

நிரவ் மோடிக்கு உடந்தையாக செயல்பட்ட பஞ்சாப் நே‌ஷனல் வங்கியின் உயர் அதிகாரிகள் பலர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. இதேபோல் மோசடி நடந்த 2010-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை பணியாற்றிய வங்கி உயர் அதிகாரிகள் அனைவரும் சி.பி.ஐ.யின் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

இந்த மோசடியில் உடந்தையாக இருந்த அதிகாரிகளில் முக்கியமானவர் யஷ்வந்த் கோஷி. இவர் மோசடி நடந்த மும்பை கிளையில் 2015 முதல் 2018-ம் ஆண்டு வரை போரெக்ஸ் துறையில் மேலாளராக பணி புரிந்தார். இந்த துறைதான் வெளிநாட்டு பணபரிமாற்றம் மற்றும் கியாரண்டி கடிதம் வழங்குதல், போன்ற பணிகளை மேற்கொள்ளும்.

யஷ்வந்த் கோஷி தான் நிரவ்மோடியின் மோசடியில் முக்கிய பங்கு வகித்தவர் என்றும் அவருக்கு பல வகையில் சாதகமாக நடந்து கொண்டு இருப்பது சி.பி.ஐ. விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையின் போது அவர் நிரவ்மோடியின் மோசடிக்கு உடந்தையாக செயல்பட்டவர்களுக்கு தங்கம்-வைர நகைகளை லஞ்சமாக வாரி வழங்கினார் என்று பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − 11 =

*