;
Athirady Tamil News

புனேயில் பிளஸ் 2 தேர்வில் மாணவிகள் உடையை அவிழ்த்து சோதனை..!!

0

மராட்டிய மாநிலத்தில் பிளஸ் 2 தேர்வு நடைபெற்று வருகிறது. புனேயில் லோனி-கால்போர் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் தேர்வு எழுத சென்ற மாணவிகள் கடுமையான பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்தநிலையில் பள்ளி நிர்வாகம் மீது மாணவிகள் போலீசில் புகார் செய்துள்ளனர். அதில் தேர்வு எழுத சென்ற போது பள்ளிநிர்வாகம் பெண் ஊழியர்கள் மூலம் எங்களது உடைகளை அவிழ்த்து துண்டு சீட்டு (பிட்) இருக்கிறதா என சோதனை செய்தனர் என குறிப்பிட்டுள்ளனர்.

சோதனை என்ற பெயரில் தனி அறைக்கு அழைத்து சென்று தங்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும், மானபங்கம் செய்ததாகவும் கூறியுள்ளனர். சோதனைக்கு பிறகு தாங்கள் மன உளைச்சலுடன் தேர்வு எழுதியதாகவும் தெரிவித்தனர்.

அதுகுறித்து லோனி கால்போர் போலீசார் பள்ளியின் 2 பெண் ஊழியர்கள் மீது வழக்குபதிவு செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடக்கிறது.

இதற்கிடையே குற்றச்சாட்டை பள்ளிநிர்வாகம் மறுத்துள்ளது. உடைகளை அவிழ்க்கும்படி எந்த மாணவியையும் கட்டாயப் படுத்தவில்லை என கூறியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

12 + nineteen =

*