;
Athirady Tamil News

12 லட்சம் ரூபாய் மாத வருமானம் ஈட்டி ரெக்கார்ட் வைத்த பிரபல டீக்கடை..!!

0

மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் உள்ளது யாவ்லே டீ ஹவுஸ். நகரின் மிக பிரபலமான கடைகளில் இதுவும் ஒன்று. டீ மட்டுமல்ல சிற்றுண்டிகளுக்கும் இந்த கடை பிரபலமானது. இந்நிலையில், தனது போட்டியாளர்களை பொறாமையும் ஆச்சரியமும் படும் வகையில் யாவ்லே டீ ஹவுஸ் ஒரு சாதனை செய்துள்ளது.

மூன்று கிளைகளை கொண்ட இந்த டீ ஸ்டால் 12 லட்சம் ரூபாய் மாத வருமானம் ஈட்டியுள்ளது. விரைவில் இந்த கடையை சர்வதேச பிராண்ட் ஆக மாற்றுவேன் என சூளுரைக்கிறார் கடையின் உரிமையாளர் நவ்னாத் யாவ்லே. “பக்கோடா மட்டுமல்ல, டீ வியாபாரமும் வேலை வாய்ப்புதான். இந்த தொழில் வேகமாக வளருவது மகிழ்ச்சியை அளித்துள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.

புனே நகரின் முக்கிய பகுதிகளில் அமைந்துள்ள மூன்று கிளைகளிலும் தலா 12 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × three =

*