;
Athirady Tamil News

லண்டனில் நாயை காப்பாற்ற குதித்தவர் பரிதாபமாக இறந்த சம்பவம்..!!

0

லண்டனில் உள்ள ஏரியில் நாயை காப்பாற்றுவதற்காக குதித்த முதியவர் ஒருவர் பரிதாபமாக இறந்துள்ளார்.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் உள்ள Danson Park-ல் உள்ள ஏரியில் 60 வயது முதியவர் போட்டிங் சென்ற போது, போட்டில் இருந்த அவரது நாய் குதித்தால், அந்த நாயை காப்பாற்றுவதற்காக குதித்துள்ளார்.

தற்போது அங்கு பனி மழை போல் கொட்டுகிறது. மைனஸ் 4 டிகிரி வரை காலநிலை மிக மோசமாக உள்ளதால், ஏரியில் குதித்த உயிருக்கு போராடியுள்ளார்.

இந்த தகவலை அறிந்த பொலிசார் உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்

இது குறித்து பொலிசார் கூறுகையில், 60 வயது மதிக்கத்தக்க நபர் நாயை காப்பாற்ற முயற்சித்து பரிதாபமாக இறந்துள்ளார்.

அவர் குறித்து முழுமையான தகவல் தெரியவில்லை, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்.இச்சம்பவம் சரியாக உள்ளூர் நேரப்படி மாலை 3.55 மணிக்கு நடந்துள்ளதாக கூறியுள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

6 + ten =

*