;
Athirady Tamil News

மருந்து விலைக் குறைப்பு நடவடிக்கையின் மூலம் 900 கோடி ரூபா இலாபம்…!!

0

நாட்டில் மருந்து வகைகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போதே, சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மருந்து வகைகளின் விலைக் குறைப்பு காரணமாக மக்கள் பெரும் நன்மையடைந்திருந்த போதிலும், ஊடகங்கள் இது தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தவில்லை என்றும், புற்றுநோய் இருதய நோய் போன்ற பாரிய நோய்களுக்கு வழங்கப்படும் மருந்துகள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டிருப்பதாகவும் சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.

அரசாங்கத்தினால் சில மருந்து வகைகளின் விலைகள் பல மடங்காக குறைக்கப்பட்டுள்ளதால், இந்தவிலை குறைப்புக்கான நடவடிக்கையின் மூலம் 900 கோடி ரூபா இலாபம் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 − 11 =

*