;
Athirady Tamil News

தலவாக்கலையில் பாடசாலை சுற்று புற சூழலில் சிறுத்தை குட்டி மீட்பு..!!

0

தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலய சுற்று புற சூழலில் சிறுத்தை குட்டி ஒன்று இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தலவாக்கலை தமிழ் மாகா வித்தியாலய சுற்று புற சூழலில் இன்று(04-03-2018) ஞாயிற்றுக்கிழமை காலை பெற்றோர்கள் சிரமான பணியில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்தபோது பாடசாலையின் வளாகப்பகுதியை அண்டிய காடுகளை சுத்தம் செய்யும்போது அங்கு இறந்த நிலையில் சிறுத்தை குட்டியொன்று மீட்கப்பட்டுள்ளது.

இப்பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக பிரதேச மக்கள் அச்சம் தெரிவித்து வந்த நிலையில் இன்று காலை பாடசாலை வளாகத்தில் மேற்படி சிறுத்தை குட்டியை இறந்த நிலையில் மீட்டுள்ளனர்.

சம்பவ இடத்துக்கு சென்ற தலவாக்கலை பொலிஸார் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனா்.

குறிப்பாக அண்மை காலமாக மலையக பகுதிகளில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதோடு தேயிலை மலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களையும் சிறுத்தைகள் தாக்கிய சம்பவங்கள் கூடுதலாக பதிவாகியுள்ளன.

எனவே இது தொடர்பாக வன விலங்கு பாதுகாப்பு பிரிவினர் மக்களின் நலனில் அக்கறை கொண்டு செயற்படுமாறும், மக்களை பாதுகாப்பதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nine + 16 =

*