;
Athirady Tamil News

சர்வதேச குற்றவியல் பொறிமுறையை அமுல்படுத்த வேண்டும்: கையெழுத்து வேட்டை ஆரம்பம்..!! (படங்கள்)

0

மட்டக்களப்பில் ஜ.நா பாதுகாப்புச் சபை தலையிட்டு சர்வதேச குற்றவியல் பொறிமுறையை அமுல்படுத்தவேண்டும் என்பதை வலியுறுத்தி பாதிக்கப்பட்ட மக்களிடம் கையொப்பம் பெறும் நடவடிக்கையை இன்று ஞாயிற்றுக்கிழமை (04-03-2018) ஆரம்பிக்கப்பட்டது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இந்த நடவடிக்கை இன்று பகல் ஆரம்பிக்கப்பட்டது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டு இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் கையொப்பம் இட்டு ஆரம்பித்து வைத்தாா்.இதனை தொடர்ந்து மக்கள் ஒன்றிணைந்து கையொப்பமிட்டனா்.

இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தர்மலிங்கம் சுரேஸ்…..

இலங்கை போர்குற்ற விவகாரம் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு நியாயதிக்கத்தை தீர்மானத்தை அல்லது விஷேட சர்வதேச குற்றவியல் தீர்பாயத்தை உருவாக்கும் தீர்மானத்தை ஜ.நா பாதுகாப்புசபை நிறைவேற்ற வேண்டும் என கோருகின்றோம் .

இதன் அடிப்படையில் புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ்மக்கள். இந்தியா தமிழ்நாடு போன்ற நாடுகளில் தமிழ் மக்கள் இந்த கையொப்பம் பெறும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.

இந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து இடம்பெற்றுவருகின்றது. அவ்வாறே கிழக்கில் கையொப்பம் பெறும் நடவடிக்கை மட்டக்களப்பில் இன்று ஆரம்பித்துள்ளோம்.

இது தொடர்ந்து சகல பிரதேசங்களிலும் இடம்பெறும். எனவே நீதியை பெறுவதற்கு அணைத்து தமிழ் மக்கள், புத்திஜீவிகள், பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து யைபொப்பம் இட அணிதிரளுமாறு தெரிவித்தார்.

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…..

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen + eleven =

*