;
Athirady Tamil News

கொக்குவில் பிரம்படி வீதியில் வீட்டின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்..!!

0

கொக்குவில் பிரம்படி வீதியில் உள்ள வீட்டின் மீது சற்று முன்னர் பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இருவர் யாழ்ப்பாண பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக தெரியவருகையில்…..

இன்று(04-03-2018) கொக்குவில் பிரம்படி பகுதிக்கு சென்ற 7 பேர் கொண்ட குழுவினர் அங்குள்ள வீடு ஒன்றுக்குள் நுழைந்து ஒரு நபரை விசாரித்துள்ளனர்.

அவர் அங்கு இல்லை என வீட்டில் உள்ளவர்கள் தெரிவித்த போது, வீட்டின் மீது பெற்றோல் குண்டை வீசிவிட்டு சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × one =

*