;
Athirady Tamil News

ஜம்மு காஷ்மீரில் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலி..!!

0

ஜம்மு காஷ்மீரின் ஷோபியன் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் நான்கு பேர் உயிரிழந்தனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஷோபியான் மாவட்டத்திற்கு உட்பட்ட பொகான் பகுதியில் உள்ள சாலையில் பாதுகாப்புப்படையினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு வாகனத்தை பாதுகாப்புப்படையினர் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அந்த வாகனத்தில் வந்தவர்கள் பாதுகாப்புப்படையினரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதையடுத்து பாதுகாப்புப்படையினர் தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. இதில் அந்த வாகனத்தில் வந்த நான்கு பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் ஒருவர் பயங்கரவாதி எனவும், மற்ற மூன்று பேர் அவருக்கு உதவி செய்தவர்கள் எனவும் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அந்த பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

14 + 11 =

*