;
Athirady Tamil News

இந்திய துணைத் தூதுவரின் சேவையைப் பாராட்டி யாழில் விருந்துபசாரம்..!!

0

யாழ்ப்பாணத்திலிருந்து விடைபெற்றுச் செல்லவுள்ள இந்திய துணைதூதுவர் ஆ.நடராஜனின் சேவையை பாராட்டும் விதமாக யாழ் முஸ்லிம் சிவில் சமூகம் ஏற்பாடு செய்த விருந்துபசார நிகழ்வொன்று யாழ்ப்பணத்திலுள்ள தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்றுள்ளது.

வடமாகாணசபை உறுப்பினர் அயுப் அஸ்மின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது யாழ் மாவட்டத்திலுள்ள முஸ்லிம் மக்களின் கல்வி விடயத்தில் இந்திய துணை தூதுவர் ஆ.நடராஜன் செய்த உதவிகள் மற்றும் இந்திய வீட்டுத்திட்டம் உள்ளிட்ட ஏனைய வாழ்வாதரம் தொடர்பிலும் அவர் மேற்கொண்ண சேவைகளிற்கு இதன்பேது முஸ்லிம் சமூகத்தால் நன்றி தெரிவிக்கப்பட்டது.

தூதுவர் நடராஜனுக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை வழங்கிய முஸ்லிம்கள் நினைவுப் பரிசில்களைவும் அவருக்கு வழங்கி வைத்தனர்.

இதேவேளை இந்த நிகழ்வில் வட மாகாண சபை உறுப்பினர்களான ப.கஜதீபன், ஜெயசேகரன் மற்றும் யாழ் மாநகரசபை உறுப்பினர் ஆர்னோல்ட் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 − fifteen =

*