;
Athirady Tamil News

யாழ் பொலிஸ் நிலையத்தில் ஏற்பட்ட பெரும் தட்டுப்பாடு…!!

0

யாழ்ப்பாணம் பிரதம பொலிஸ் நிலையத்தில் இருந்து மட்டும் கடந்த முதலாம் திகதி ஒரே தடவையில் 140 பொலிசார் இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளதனால் பெரும் ஆளணிப் பற்றாக்குறையை பொலிஸ் நிலையம் எதிர்கொள்வதாக தகவல் கிடைத்துள்ளது.

இதுபற்றித் தெரியவருவதாவது,

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பல பொலிஸ் நிலையங்களில் இருந்தும் பொலிசார் வருடாந்த இடமாற்றத்தின் மூலம் மாற்றலாகிச் சென்றுள்ளபோதிலும் யாழ்ப்பாணம் பிரதம பொலிஸ் நிலையத்தில் இருந்து மட்டும் கடந்த முதலாம் திகதி 140 பொலிசார் இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளனர்.

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தற்போது சுமார் 530 பொலிசார் பணியாற்றும் நிலையில் ஒரே தடவையில் 140 பொலிசார் இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளனர். இதேநேரம் அவர்களிற்கான புதிய பொலிசார் யாழ்ப்பாணம் வரவுள்ள நிலையிலும் இதுவரையில் புதிய பொலிசார் தமது கடமைகளை பொறுப்பேற்கவில்லை என தெரியவருகிறது.

இருப்பினும் இன்னும் ஓர் இரு நாட்களில் பெரும் எண்ணிக்கைக்கான பொலிசார் யாழ்ப்பாணம் வருவர் எனவும் எதிர் பார்க்கப்பனுகின்றது.

இதேநேரம் குறித்த எண்ணிக்கையானது யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் மட்டுமானதாகவுள்ளதோடு குடாநாட்டின் சகல பொலிஸ் நிலையங்களில் இருந்தும் அதிக பொலிசார் இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ள நிலையில் அந்த இடங்களிற்கும் புதிய பொலிசார் பிற மாவட்டங்களில் இருந்து வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three + two =

*