மட்டு ‘2018 சிறுபோக ஆரம்பக் கூட்டம்’ இன்று…!!

மட்டக்களப்பு மாவட்டத்தின், உன்னிச்சை நீர்ப்பாசனத் திட்டத்துக்கான, ‘2018 சிறுபோக ஆரம்பக் கூட்டம்’ இன்று காலை வவுணதீவு பிரதேச செயலகத்தில் இடம்பெறவுள்ளது.
உறுகாமம், கித்துள் ஆகிய திட்டங்களுக்குரிய கூட்டம் இன்று பிற்பகல் செங்கலடி பிரதேச செயலகத்தில் இடம்பெறவுள்ளது.
சிறுபோக நெற்செய்கை சம்பந்தான தீர்மானங்களை எடுக்கப்பட உள்ள இக்கூட்டங்களுக்கு மாவட்டச் செயலாளர் தலைமை தாங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.