;
Athirady Tamil News

யாழில் பேருந்து ஊழியர்களால் சிறுவர்கள் மற்றும் பெண்களூக்கு ஏற்படும் அவலம்..!!

0

யாழ் பேருந்து நிலையத்தில் ஊழியர்கள் சிலர் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் முகமாக நடந்து கொள்வதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக யாழ் -கொழும்பு பேருந்துக்கள் தரித்து நிற்கும் பகுதிகளிலேயே இவ்வாறான இடையூறுகள் காணப்படுவதாகும் பொதுமக்கள் சிறுவர்கள் பெண்கள் போன்றோரை தமது பேருந்தில் ஏற்றும்போது கையில் சிகரெட்டுடன் புகைப்பிடித்துக்கொண்டும் தகாத வார்த்தைகளை பிரயோகித்துக்கொண்டும் நிற்பதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இலங்கையில் பொது இடங்களில் புகைபிடித்தல் தண்டனைக்குரிய குற்றமாகும் அவ்வாறெனில் யாழ் பேருந்து நிலையத்தில் இவ்வாறான செயற்பாடுகள் அதுவும் இ.போ.ச ஊழியர்களே இவ்வாறு சட்டத்தை மீறுவதென்பது கவலைக்குரிய விடயமாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − 2 =

*