;
Athirady Tamil News

ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் சகோதரர் முகமாலை செல்கின்றார்..!!

0

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஜோர்தான் இளவரசர் மிரெட் அல் ஹுஸைன், ஐ.நா மனித உரிமை ஆணையாளரான செய்ட் அல் ஹுஸைனின் சகோதரராவார்.

கண்ணிவெடிகளைத் தடைசெய்யும் பிரகடனத்தின் சிறப்புத் தூதுவரான ஜோர்தான் இளவரசர் மிரெட் அல் ஹுஸைன் நேற்று இலங்கையை வந்தடைந்தார்.

இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளை பார்வையிடுவதற்காக அவர் நாளை முகமாலைக்குச் செல்லவுள்ளார்.

கண்ணிவெடிகளைத் தடைசெய்யும் பிரகடனத்தில் இலங்கை அரசாங்கம், 163ஆவது நாடாக இணைந்து கொண்டுள்ளதை அடுத்தே இளவரசரின் இந்தப் பயணம் இடம்பெறுகிறது.

ஐ.நா மனித உரிமை ஆணையாளரான செய்ட் அல் ஹுஸைனின் சகோதரரான இளவரசர் மிரெட் அல் ஹுஸைன் நாளை முகமாலைக்குச் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × two =

*