;
Athirady Tamil News

கேகாலை சம்பவம் தொடர்பில் 24 பேர் கைது…!!

0

கேகாலை தெல்தெனிய – மொரகஹமுல பிரதேசத்தில் உள்ள விற்பனை நிலையத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 9.00 மணியளவில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் 22 ஆம் திகதி பாரவூர்தியொன்றில் பயணித்துக் கொண்டிருந்த நபரொருவர் மீது முச்சக்கரவண்டியில் வந்த நால்வர் தாக்கிய நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த 3 ஆம் திகதி அவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பான சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு தெல்தெனிய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் அவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலேயே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை நேற்று இரவு இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 24 பேரும், இன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், தெல்தெனிய பகுதியில் பாதுகாப்பு பலப்பத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 + twenty =

*