;
Athirady Tamil News

பிரியங்க பெர்னாண்டோவின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்க இராணுவம் தீர்மானம்…!! (படங்கள் & வீடியோ)

0

பிரித்தானியாவிலுள்ள பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவின் குடும்பத்தினரின் தேவைகளுக்காக நிதி உதவி வழங்க இலங்கை இராணுவம் தீர்மானித்துள்ளது.

இராணுவ தளபதியின் உத்தரவிற்கமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ இலங்கைக்கு அழைக்கப்பட்ட போதிலும் அவரது குடும்பத்தினர் இன்னமும் பிரித்தானியாவில் வாழ்ந்து வருகின்றனர்.

பிரியங்க நாட்டுக்கு அழைக்கப்பட்டமையினால் தூதரக பணிக்காக அவருக்கு கிடைக்க வேண்டிய சம்பளம் கிடைக்கவில்லை. தற்போது அவருக்கு பிரிகேடியர் பதவிக்கான சம்பளம் மாத்திரமே கிடைக்கின்றது. அதற்கமைய முதற்கட்டமாக இராணுவ தளபதியின் உத்தரவுக்கு அமைய பிரியங்கர பெர்னாண்டோவின் குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாதமும் அவருக்கு நிதி உதவி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ராஜதந்திர ரீதியான சம்பவம் ஒன்றுக்கு முகம் கொடுத்துள்ள இராணுவ அதிகாரியின் குடும்பத்திற்காக இந்த முறையில் இராணுவம் நிதி உதவி வழங்கும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திக்கு….

லண்டனில் தமிழர்களின் கழுத்தை வெட்டுவேன் என, மிரட்டி, பணி நீக்கம் செய்யப்பட்ட பிரிகேடியர் மீண்டும் பணியில்..!! (படங்கள் &வீடியோ) இது எப்பிடி இருக்கு.

லண்டனில் தமிழர்களின் கழுத்தை வெட்டுவேன் என, மிரட்டிய இலங்கை இராணுவ அதிகாரி..! (வீடியோ) -இது எப்படி இருக்கு-

“நான் ஏன், அப்படி செய்தேன்?”.. பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ விளக்கம்!

கழுத்தை அறுப்பதாக கூறிய பிரிகேடியருக்கு, பாதுகாப்பு அளிக்கும் இராணுவம்…!! (படங்கள் & வீடியோ)

இராணுவத்துக்கு அஞ்சும் அரசாங்கம்…!! பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ விவகாரம்..!! (படங்கள் & வீடியோ) இது எப்பிடி இருக்கு

You might also like

Leave A Reply

Your email address will not be published.

10 + two =

*