;
Athirady Tamil News

16 வயது மாணவனுடன் ஆசிரியைக்கு தகாத உறவு: செல்போனால் வெளியான உண்மை..!!

0

அமெரிக்காவில் 16 வயது மாணவனுடன் ஆசிரியைக்கு தகாத உறவு இருந்த நிலையில், ஆசிரியைக்கு 36 மாதங்கள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Pennsylvania மாகாணத்தை சேர்ந்தவர் மெலிசா போன்கோஸ்கி (38). பள்ளிக்கூட ஆசிரியையான இவருக்கு தனது வகுப்பை சேர்ந்த 16 வயது மாணவனுடன் கடந்த 2015-ல் தகாத உறவு ஏற்பட்டுள்ளது.

ஆனால் போக போக இந்த உறவு மாணவனுக்கு பிடிக்காத நிலையில் மெலிசாவை விட்டு விலகியுள்ளார்.

ஆனாலும் மாணவனை மிரட்டிய ஆசிரியை தன்னுடன் உறவு கொள்ள வைத்துள்ளார்.

இந்நிலையில் கடந்தாண்டு மாணவன் செல்போனுக்கு மெலிசா ஆபாச மெசேஜ் அனுப்பியதை அவரின் காதலி பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்

இது குறித்து உடனடியாக அவர் பொலிசில் புகார் அளித்த நிலையில் பொலிசார் கடந்த ஆகஸ்ட் மாதம் பொலிசார் மெலிசாவை கைது செய்தனர்.

இதோடு குறித்த பள்ளியிலிருந்து அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.இவ்வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் ஜாமீனில் மெலிசா விடுவிக்கப்பட்டார்.

பின்னர் மீண்டும் கைது செய்யப்பட்ட அவர் மீதான குற்றங்கள் கிட்டத்தட்ட நிரூபிக்கப்பட்டுள்ளதால் மெலிசாவுக்கு 9-லிருந்து 36 மாதங்கள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seven − 1 =

*