;
Athirady Tamil News

மாணவர்களுக்காக ஆசிரியர் செய்த நெகிழ்ச்சி செயல்..!!

0

ஆப்பிரிக்கா நாடான கானாவில், பள்ளி ஆசிரியர் ஒருவர் தங்களது பள்ளியில் கணினி இல்லாததால், கரும்பலகையில் Microsoft Word-யின் செயல்பாட்டை வரைந்து பாடம் நடத்தியுள்ளார்.

கானாவின், குமாசி நகரில் உள்ள பள்ளியில் கணினி வசதி கிடையாது. இதனால், பள்ளி ஆசிரியரான ஒவாரா கவாட்வோ, கரும்பலகையிலேயே Microsoft Word-யின் செயல்பட்டை வரைந்து காட்டி பாடம் நடத்தினார்.

இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, Microsoft நிறுவனம் கவாட்டோவின் முயற்சிக்கு பாராட்டு தெரிவித்ததுடன், அப்பள்ளிக்கு வேண்டிய உபகரணங்களை செய்து தருவதாக உறுதி அளித்துள்ளது.

இது குறித்து கணினி ஆசிரியர் ஒவாரா கவாட்டோ கூறுகையில், ‘நான் எனது மாணவர்களை நேசிக்கிறேன். அவர்களுக்கு எந்த வகையிலாவது, நான் நடத்தும் பாடங்கள் புரிய வேண்டும் என்று விரும்புகிறேன்.

நான், இதை எனது பேஸ்புக் பக்கத்தில் மற்ற புகைப்படங்களைப் போலதான் பகிர்ந்தேன். ஆனால், இது இந்த அளவு மக்களிடையே ஆதரவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கவில்லை’ என தெரிவித்துள்ளார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eight − 2 =

*