;
Athirady Tamil News

ஜனாதிபதி, துணை ஜனாதிபதி வாகனங்களுக்கும் பதிவு எண்..!!

0

இந்திய அரசியல் அமைப்பின் மூத்த அதிகாரிகளான ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, மாநில கவர்னர்கள் மற்றும் அவர்களின் செயலாளர்களின் வாகனங்களிலும் பொதுமக்களின் வாகனங்களை போல் பதிவு எண் இருக்க வேண்டும் என டெல்லி ஐகோர்ட்டில் பொதுமனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நேற்று தலைமை நீதிபதி(பொறுப்பு) கீதா மிட்டல் மற்றும் நீதிபதி ஹரிசங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் சார்பில் எழுத்து வடிவில் வாக்குமூலம் அளிக்கப்பட்டது.

அதில், “ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, மாநில கவர்னர்கள் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் ஆகிய அலுவலகங்களுக்கு கடந்த ஜனவரி மாதம் 2-ந் தேதி கடிதம் அனுப்பப்பட்டது. அதில், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, மாநில கவர்னர்கள் மற்றும் அவர்களின் செயலாளர்கள் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகத்தால் பயன்படுத்தப்படும் அனைத்து வாகனங்களிலும் பதிவு எண்கள் இருப்பதை உறுதி செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது. அதன்படி மேற்கூறிய அதிகாரிகளின் வாகனங்களில் பதிவு எண் இருப்பது விரைவில் நடைமுறைக்கு வரும்” என கூறப்பட்டு உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × three =

*